
Monday, June 15, 2009
கைப்பேசி பாதுகாப்பு மென்பொருள்

Tuesday, February 17, 2009
உங்கள் கனினியை உங்கள் நண்பர்கள் எங்கிருந்தாலும் பார்க்கலாம்.
உங்கள் கனினியை உங்கள் நண்பர்கள் எங்கிருந்தாலும் பார்க்கலாம்.
இது பலபேருக்கு தெரிந்தகதைதான் இருந்தாலும் என்னைப்போல சிலபேருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பு இருக்கிறது.
அதன் பெயரோ டீம் வீய்வர் அந்த மென்பொருளை இறக்கி ரன் செய்தவுடன் அது ஒரு பாஸ்வேர்ட் மற்றும் யூசர்நேம் தருகிறது.
அந்த பாஸ்வேர்டையும் யூசர்நேமயும் உங்களாது நண்பருக்கு கொடுக்கவேண்டும்.அவ்வளவுதான் உங்களது நண்பர் உங்களது கனினியில் புகுந்து ஆராய்ந்து கொண்டிருப்பார்.
இருந்தாலும் உங்களது அனுமதியில்லாமல் எந்த ஒரு கோப்புகளையும் அவ்வளவு சுலபமாக எடுத்துவிடமுடியாது.
ஆனால் எப்போது உங்கள் பாச்வேர்ட் மற்றும் யூசர்நேமை கொடுத்துவிடுகிறீர்களோ அடுத்த நிமிடம் உங்களது டெக்ஸ்டாப் உங்கள் கனினிதிரை நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் அனைத்தயும் உங்கள் நண்பரால் கானமுடியும்.
நீங்கள் உங்கள் நண்பரின் கனினியை பார்க்கவேன்டுமானால் உங்கள் நண்பரும் அந்த மென்பொருளை நிறுவியிருக்கவேண்டும் அவரிடம் கேட்டு பெற்று கொள்ளுங்கள் அவருடைய பாஸ்வேர்ட் மற்றும் யூசர்நேமை.
இது ஒரு பிரச்சனைக்குறிய விசயம் என்றாலும் சிலவகையில் நன்மைதரகூடியதாகவும் இருக்கிறது இந்த டீம்வீய்வர்.
சில நண்பர்களுக்கு உங்கள் ஆலோசனைகளை பார்த்துகொண்டே சொல்லலாம்.ம்ம் முயற்சி பண்ணிபாருங்க உங்கள் நெருங்கிய நன்பர்களிடம். thanks mr selvamani
teamviewer dirrect download clik here and run
Monday, January 5, 2009
அன்புள்ள பில்கேட்ஸ்க்கு ஒரு வின்னப்பம்
சமீபத்தில் ஒரு கம்ப்யூட்டரும் விண்டோஸ் சாப்ட்வேரும் வாங்கினோம். அதில் சில பல பிழைகள் உள்ளதாக அறிகிறோம்.
Happy Holidays from Yahoo! Messenger Spread holiday cheers to your friends and loved ones today!
Saturday, January 3, 2009
காதலித்து கொண்டிருப்பவர்களும் கடலைபோடுபவர்களும் கொஞ்சம் பாருங்க
கடலை என்பது எந்த வித கருத்தோ அல்லது பொருளோ காரியமோ இன்றி ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் பேச்சை அடைக்காமல் நமது மனதுக்கு தோன்றியதை இஷ்டம் போல் அள்ளி விடுவதே கடலை ஆகும்.
இக்கடலையாகப்பட்டது ஒரு ஆனும் ஒரு பெண்னும் இனைந்து செய்வது.இதை ஒரு ஆணும் ஆணூமோ பெண்ணும் பெண்ணுமோ சேர்ந்து கட்டாயம் செய்ய இயலாது.அதற்கு இச்சமூகம் வெட்டி அரட்டை என்று பெயர் வைத்துருக்கிறது.
இன்னொரு நண்பர் ஒருவர் மாதத்திற்கு $100 டாலர் தனது மொபைலுக்கு பனம் கட்டுகிறார்.எல்லாம் கடலை செயல்.
இவ்விசயத்தில் பெண்கள் மிக கெட்டிகாரத்தனமாய் மாதந்தோறும் 20000 எஸ்எம்எஸ்கள் இலவசமாகத்தரும் மொபைல் சேவைகளை பயன்படுத்துகின்றனர்.
அது தவிர மினிமம் பேலன்ஸ் மெயின்டயின் செய்து மிஸ்டுகால் மங்கைகளாகவும் திகழ்கிறார்கள்.இதனால் அவர்களுக்கு பொருளிழப்பு அதிகமில்லை.இதனால் இவர்களது கடலை குறைந்த செலவில் முடிந்து விடுகிறது.
நேரிலோ அது கிடையாது,அதற்காக நீங்கள் மிகவும் சமயோசிதமாக இருக்க வேண்டும்.அவை கடலை போட போடத் தானாகவே கைகூடும்.இல்லையென்றால் விடுங்கல் வேறுயாரும் சிக்காமலா போய்விடுவார்கள்.
இருந்தாலும் நமது சீரிய ஆராய்ச்சியின் விளைவாக அறிந்துகொண்ட சில குறிப்புகள் மட்டும் உங்களுகாக,
கடலை போட சில வழிகள்,
1. நேரில் பேசும் போது கண்ணைபார்த்து பேசவும்.அதிகம் வழியாதீர்கள்.அல்லது கையில் கைக்குட்டை வைத்துகொள்ளவும்.
2.பெண்கள் சொல்லும் மொக்கை ஜோக்குகளுக்கு பி.எஸ்.வீரப்பா போல் சிரிக்கவும் சாகும்வரை சிரிக்க முயலுங்கள் அவர் இனிமேல் உங்களிடம் ஜோக்கே சொல்ல மாட்டார்.
3.அடிக்கடி ஆக்சுவலி என்னும் வார்த்தையை சேர்க்கவும்(ஹீரோயிசத்திற்கு உதவும்).ஆக்சுவலி சேர்த்து பேசுகையில் உங்களை மெத்தபடித்த கணவான் என்று எண்ணக்கூடும்.
4.வாய் கூசாமல் கேட்பவரை குறித்து புகழ்ந்து பொய் பேசவும்.ஓவர் புகழ்ச்சி உடம்புகு ஆகாது அளந்து புகழுங்கள்(உதவிக்கு நிறைய காதல் புத்தகங்கள் படித்து அறிவை வளர்க்கலாம்.ஆங்கிலபுத்தகங்கள் என்றால் சிறப்பு)
5.பேசும்போது குரங்குசேட்டைகளை தவிர்க்கவும்(காது குடைவது,மூக்கு நோண்டுவது போன்றவை)
6.அடிக்கடி உங்களை பற்றி பீத்திகொள்ளாதீர்கள்,அதை பூடகமாக செய்யவும் (அதாவது சுற்றிவளைத்து)
7.நீங்கள் இதற்குமுன் செய்த லூசுத்தனமான சேட்டைகளை குறித்தும் அதன் பின்விளைவுகள் குறித்தும் எக்காரனம் கொண்டும் பேசக்கூடாது (உதா,லைசன்ஸ் இன்றி போலிசிடம் மாட்டிகொண்டு 13 ரூபாய் கொடுத்து தப்பித்த வீரசாகசங்களை பேசவேகூடாது.)
8.எந்த கட்டத்திலும் 'அப்புறம்' என்று கேட்டு விடாதீர்கள் அது கடலையை உடனே நிறுத்திவிடும்.
நன்றி கடலைக்கு வித்திட்ட நண்பர் இளையராஜாவிற்கு
Wednesday, December 24, 2008
தமிழச்சியிடம் ஒருமணி நேர உரையாடல்.

நானும் பதிவு போட்டு பல நாட்கள் ஆகிவிட்டன. என்னவோ எழுதவும்தோன்றவில்லை.நேரமின்மை ஒரு காரணம்.நேற்று புதன்கிழமை நான் யாஹோ மெசஞ்சரில் அரட்டையடித்து கொண்டிருந்தபோது தமிழச்சியை ஆன்லைன்லில் பார்த்தேன் அப்போது சற்று பிசியாகவே இருந்தார்.
நான் முதலில் ஹாய் என்று அரட்டையை தொடங்கியபோது வெய்ட் என்ற தமிழச்சியின் பதில்.நானோ சாப்பிடவேன்டும் அப்போது இரவு 10_த்து மணி நான் தமிழச்சியிடம் நான் சென்று தோசை ஊற்றி சாப்பிட்டுவிட்டு 10_த்து நிமிடத்தில் வருகிறேன் என்று சொல்லிவிட்டு (ஏனென்றால் தமிழச்சி பிசியாக இருந்தார்) நானோ தோசை ஊற்றி சாப்பிட்டுவிட்டு மறுபடியும் அரட்டைக்கு வந்தேன்.
என்ன ஒரு ஆச்சர்யம் தமிழச்சியின் அழைப்பு நான் நினைத்து கூட பார்க்கவில்லை அவர் அழைப்பார் என்று.
(ஒகே உரையாடலுக்கு செல்வோம்)
என்னை சிலபேருக்கு தெரியும் நான் ஒரு பதிவில் கூட தமிழச்சியின் ஒரு பதிவில் அதிருப்தி அடைந்து அவரை தாக்கியும் எழுதியிருக்கிறேன்.ம்ம்ம்.. அது அப்போதுள்ள கோபத்தாலோ என்னவோ அப்படி எழுதும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன்.இருந்தாலும் நேற்றைய உரையாடலுக்கு பிறகு அவருடைய என்னம்,மனநிலை,அவருடைய எழுத்தின் நோக்கம் அனைத்தும் அருமையாக விவரித்தார்.
என்னவோ ஒரு சில வார்த்தைகளில் நமது சென்னை தமிழ் விளையாடியது.எப்படி இந்த தமிழ் என்று தமிழச்சியிடம் வினவியபோது சிரிப்பு மட்டுமே பதிலாக இருந்தது.சில வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தங்களை இந்தியர்கள் என்று சொல்லிகொள்வதற்கு வெட்க்கப்படும் இந்த சூழ்நிலையில் அவரோ இனைய உலகில் தமிழச்சி என்று தன்னை அடையாளாப்படுத்திகொன்டது அதிரவைக்கிறது.
அவரை புகழ்ந்து பேசவில்லை புகழ்ந்து சொல்ல இந்த பதிவு போடவில்லை.புகழ்ந்து சொல்வது தமிழச்சிக்கு அறவே பிடிக்காது.பிரான்சில் இருந்துகொண்டு தமிழ்நாட்டின் நிலையை அக்குவேறு ஆணிவேறாக தெரிந்து வைத்துருக்கிறார்.
தமிழச்சியின் எழுத்துபனி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!
தூற்றுவார் தூற்றட்டும் போற்றுவார் போற்றட்டும்.



























