
நான் பார்த்ததில் எளிமையிலும் எளிமை அப்படி ஒரு எளிமை,அம்மாடியோவ்! சூப்பர் ஸ்டாரைதான் சொல்லுகிறேன்.மேலே பாருங்கள் படத்தில் வைத்திருக்கும் கைத்தொலைபேசி எந்த வகை மாடல் பார்த்தாலே புரிந்துஇருக்கும்.ஆனால் அவர் நினைத்தால்,நான் சொல்லதேவையில்லை உங்களுக்கே தெரியும் எது வேண்டுமானாலும் வாங்கலாம்,ஆனால் பாருங்கள் ஒரு சிலரோ இரவு சாப்பிட உனவு இருக்காது பந்தா செய்வது தாங்கமுடியாது,இருந்தாலும் பொருத்துகொள்ள வேண்டியிருக்கிறது.அது அவர்களின் மனோபாவம்.இதுபோல் இன்னொன்று சொல்கிறேன் நம் நாட்டில் மந்திரி சென்றால் எத்தனை கார் செல்லும்? ஆனால் இங்கோ(சிங்கப்பூர்) அதுமாதிரி இல்லை,ஒரு தேவையில்லாத கூட்டம் இல்லை,நான் சிங்கப்பூரை உயர்த்தி பேசவில்லை,குறுகியகாலத்தில் சிங்கப்பூர் வளர்ந்த நாடுகள்பட்டியலில் இடம்பிடித்திருப்பது எப்படி?,இங்குள்ள அரசியல்வாதிகளின் எளிமை.சொல்லபோனால் ஒருசில நாடாளுமன்ற உறுப்பிணர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்துகிறார்கள் என்பது குறுப்பிடதக்கது.
2 comments:
தமிழகத்தில் தாங்கள் எதிபார்க்கும் எளிமை இனி சாத்யமா? தெரியவில்லை. நடுத்திர குடும்பங்களில் நடைபெறும் குடும்ப விழாக்ககள் கூட
ஆடம்பரமாக நடைபெறுவது கண்கூடு.தற்சமயம் கட்டப்படும் வீடுகளில் சமயல் அறை,குளிப்பறை,வரவேற்பறை முதலியவற்றிற்கு பல லட்சங்கள் செலவளிப்பது சதாரணம்.மக்கள் வாங்கும் சக்தி அதிகரித்து இருப்பது ஒரு காரணம்.இக் காலகட்டத்தில் உச்ச நடிகரின் (super star rajini)எளிமை ,இறை நம்பிக்கை ,அரசியல் சார்பின்மை,பற்றற்ற தன்மை உண்மையில் போற்றுதற்குரியது.
வாழ்த்துக்களுடன்
வரவேற்கிறேன் :))
Post a Comment