Tuesday, April 8, 2008

அறிவாளிபோல் நினைப்பவர்களுக்கு.


அறிவாளிபோல் நினைப்பவர்களுக்கு.நம்மில் சிலரை நினைத்தால்,(சிலர் மட்டும்).எனக்கு கோபம் கோபமாக வருகிறது.இதை ஒரு அனுபவமாகத்தான் எழுதுகிறேன்.நாம் நமக்கு தெரியாதவற்றை என்ன செய்வோம்? தெரிந்தவர்களிடம் கேட்டுதெரிந்து கொள்வோம் அல்லவா?ஆனால் இவர்கள் அப்படி செய்யமாட்டார்கள்.தெரியும் தெரியும் என்று சொல்லி சொல்லி கடைசிவரை தெரிந்துகொள்ளாமலே போய்விடுவர்.ஏன்?இவர்கள் தெரியாது,என்று சொன்னால் என்ன ஆகிவிடப்போகிறது?வறட்டு கெளரவம் என்பார்களே?எதுவாஇருந்தாலும் இவர்களை பார்க்கும் போது எனக்கு கடும் கோபம் வரும்.ஆனால் ஒரு சிலர்களோ தெரிந்ததையும் தெரியாது என்று சொல்லி மிகத்தெளிவாக தெரிந்துகொள்வர்.இதில் என்ன ஆகப்போகிறது?தெரிந்தவர் நம்மில் வயது சிரியவராயினும் கவலை வேண்டாம். தயக்கமின்றி கேளுங்கள்.ஏனென்றால் உங்களுக்கு தெரியாது.தெரிந்துகொள்ளவேண்டும் என்பதிலேயே குறிக்கோளாக இருங்கள். இப்படித்தான் பலர் இவ்வுலகில் வெற்றிபெற்றவர்கள்.

2 comments:

Unknown said...

தெரியாத செய்திகள்,உலகியல் நடப்புக்கள்,பழக்க வழக்கங்கள்,வாழ்வியல் அனுகுமுறைகள்,செயல் முறைகள்
முத்லிய பலவற்றை (ego தவிர்த்து)பிறரிடம் தெளிந்து சிறந்து உயர்ந்தவர்கள்
இப்புவியுலகில் எராளம்

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்

தென்றல்sankar said...

நல்லதொரு விளக்கம்! நன்றி நெல்லை.