Saturday, May 17, 2008

கடவுள் இருக்கிறாரா? இல்லையா?





நண்பர் வால்பையனை கேட்டால் இல்லாத ஒருவரைபற்றி ஏன் பேசிகொன்டிருக்கிறீர்கள்? என்று கோபத்துடன் கேட்பார்.பெரியார் சொல்லிட்டு போய்விட்டார் கடவுள் இல்லை கடவுளை கற்பித்தவன் முட்டாள் காட்டுமிரான்டி,நான் பார்த்தவரையில் எனது நன்பர் ஒருவர் இருக்கிறார் அவர் காலை மாலை இரவு என்று எப்போது பார்த்தாலும் சாமி கும்பிட்டுகொண்டுதான் இருப்பார்.இதை நான் குறை சொல்லவில்லை ஏனென்றால் அவருக்கு நம்பிக்கை. ஏன் எனக்கும் நம்பிக்கைதான்.இதில் ஒருசிலர் (வால்பையன் போன்று)மட்டும் நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்பதுபோல் எது சொன்னாலும் சொன்னதையே திருப்பிசொல்லிகொண்டிருப்பர்.அவர்கள் வேண்டுமென்றால் விதன்டாவாதத்திற்கு பேசலாம் நான் கேட்கிறேன் கடவுள் இல்லை என்று சொல்வபவர்களிடம் மனதில் கைவத்து சொல்லுங்கள் கடவுள் இல்லையென்று.சொல்லமுடியாது அப்படி சொன்னாலும் உள்ளுக்குள் 100 சதவீதம் கண்டிப்பாக பயம் இருக்கும்.நான் கேட்க்கிறேன் இதை ஒரு சர்வே எடுப்பதாக நினைத்து கொள்ளுங்கள் தயவுசெய்து நீங்களே சொல்லுங்கள் கடவுள் இருக்கிறாரா?இல்லையா? வால்பையன் இல்லையென்றுதான் சொல்வார்.அதைபற்றி நாம் கவலைபடகூடாது.நம்பிக்கை இருந்தால்தான் வாழ்க்கை.கடவுள் இல்லையென்று அனைவரும் நம்பிவிட்டால் இந்த பூமியில் மனிதர்களை பார்க்கமுடியாது ஏன் இந்த பூமி பாலைவனமாகத்தான் காட்சியளிக்கும்.

No comments: