
நடிகர் ரஜினி மகள் ஐஸ்வர்யா தயாரிக்கும் புதிய படம் பில்லா-2 படத்தில் நடிக்க ரூ 10 கோடி கொடுத்து நடிகர் அஜீத் ஒப்பந்தம் செய்யபட்டுள்ளதாக கோலிவுட் பரபரக்கிறது .
சூப்பர் ஸ்டார் ரஜினி மகள் ஐஸ்வர்யா தனது ஆக்கர் ஸ்டுடியோ மூலம் சூப்பர் ஹிட்டான புதிய 'பில்லா' படத்தின் அடுத்த பாகத்தை நடிகர் அஜித்தை வைத்தே எடுக்கவுள்ளதாக தவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக ரூ 10 கோடி சம்பளம் பேசி ஒப்பந்தத்தில் நடிகர் அஜீத் கையெழுத்திட்டதாகவும்
கூறப்படுகிறது.இது உண்மையென்றால் தமிழ் திரைவுலகில் ரஜினிக்கு அடுத்து அதிக சம்பளம் வாங்கும் நடிகர் அஜீத் என்ற பெருமை கிடைக்கும்.இந்த படத்தை புதிய பில்லா படத்தை இயக்கிய விஸ்னுவர்தனே இயக்குவார் என்று சம்பந்தபட்ட வட்டாரத்தில் கிசிகிசுக்கபடுகிறது.
மேலும் படத்துக்கான ஆரம்பகட்ட கதை டிஸ்கசன் முடிந்துவிட்டது.பிரான்ஸில் நடைபெறவுள்ள கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு அஜீத்தும் விஸ்னுவர்தனும் சென்று திரும்பியதும் ஸ்கிரிப்ட் தயாரிப்பில் மும்முரமாக ஈடுபடுவார்கள் என்று தெரிகிறது.
ஹாலிவுட் பிரபல தயாரிப்பு நிறுவனமான 'வார்னர் பிரதர்ஸ்'வுடன் நான்கு தென்னிந்திய மொழிகளில் படங்களை தயாரித்து தருவதற்கு ரஜினி மகள் ஐஸ்வர்யா ஒப்பந்தம் செய்துள்ளார்.இந்த வரிசையில் வரும் முதல் படமாக பில்லா-2 இருக்கும்.
இந்தபடத்தில் அஜீத்தை கதாநாயகனாக தேர்ந்தெடுத்தது ரஜினியின் யோசனையாம்.அஜீத் விஸ்னுவர்தன் வெற்றி கூட்டணி இதிலும் தொடரட்டும் என்று மகளிடம் ரஜினி கூறியுள்ளாராம்.

நன்றி
தமிழ் முரசு
சிங்கப்பூர்
2 comments:
விஷ்ணு வரதன் ஐந்து கோடி சம்பளம் கேட்டதாகவும், அதை தர மறுத்ததால் அவர் விலகிவிட்டதாகவும் தகவல்.
மேலும் ஐஸ்வரியாவே இயக்கபோவதாக ஒரு செய்தி.
திரு அன்பெழிலன்
தகவலுக்கு நன்றி
Post a Comment