அன்று இரவு 10மணி இருக்கும் நான் சிங்கப்பூரில் உள்ள லிட்டில் இந்தியா என்ற பகுதிக்கு சென்றுவிட்டு எனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தேன்.துரதிஸ்டவசமக எனது கைபேசியை பேருந்தில் தவற விட்டுவிட்டேன்.அதை எனது வீட்டில் வந்தவுடன்தான் நான் தவறவிட்டது உனரநேரிட்டது.மிகவும் அதிர்ச்சிக்குள்ளானேன்.என்ன செய்வது எனது நம்பருக்கு அழைத்து பார்த்தேன் எனது கைபேசி ஆஃப் செய்யபட்டு இருந்தது.மருநாள்தான எனக்கு இந்த ஒற்றனின் குறுஞ்செய்தி வந்தது.என்ன பார்க்குறீங்க,நான் ஏற்கனவே எனது கைப்பேசியில் ஒற்றன் மென்பொருளை நிறுவிவைத்திருந்தது எனக்கு எனது கைபேசியை திரும்பபெற வழிவகுத்தது.
அதுவும் இலவச மென்பொருள் ஒரு $400 வெள்ளி மதிப்புடைய கைப்பேசியை திரும்பபெற்றுதந்தது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.அந்தமென்பொருளை நிறுவியவுடன் சிலவற்றை setting செய்ய வேண்டும்.அதாவது safety number உங்களுடைய அண்னன்,தம்பி,ஏன் நன்பர்களுடைய கைபேசி எண்னை அந்த செட்டிங்கில் செட் செய்துவிடவேன்டியதான.உங்கள் கைபேசியை யார் எடுத்தார்களோ, அவர்களுடைய சிம்கார்டை உங்களுடைய கைபேசியில் மாற்றறும்போது உங்களுடைய safety number உங்கள் (அன்ணனுக்கோ,தம்பிக்கோ,நன்பருக்கோ) இந்த ஒற்றன் குறுஞ்செய்தி அனுப்பிவிடுவான.திருடனுடைய கைபேசி நம்பர் உங்களுக்கு கிடைத்தவுடன் அப்புறம் என்ன நான் சொல்லவேண்டாம் அதுக்கு அப்புறம் நீங்க பார்த்துக்குவீங்க!என்னா ஒன்று அந்த மென்பொருளை உங்கள் போஃன் மெமரியில் ஏற்றுங்கள் மெமரி கார்டில் ஏற்றினால் திருடியவர் உங்கள் மெமரி கார்டை கழற்றிவிட்டு அவருடைய சிம்கார்டை போட்டால் அவர் மாட்டமாட்டார்.தப்பித்து விடுவார்.எனது நன்பருக்கு இப்படிதான் குறுஞ்செய்தி அனுப்பினான் இந்த ஒற்றன்.rsankar's mobile stolen.don't delete this message.நான் ஒரு private call பன்னி திருடனுக்கு எல்லாவிவரமும் சொன்னேன்.அதே லிட்டில் இந்தியாவிலேயே சென்று பெற்றுகொண்டேன.சிங்கப்பூரில் அனைத்து சிம்கார்டுகளும் பதிவுசெய்யபட்ட பிறகே பயன் படுத்தமுடியும்.வாழ்க ஒற்றன் மென்பொருள். நன்றி ஞானசேகரன் அவர்களுக்கு. இங்க சொடுக்கி தகவலிரக்கம் ஒற்றன்
6 comments:
நல்ல தகவல் (கைதொலைபேசி தொலைந்து போனது அல்ல) ஒற்றன் பற்றிய தகவலும் திரும்ப கிடைத்த தகவலையும் தான் சொல்கிறேன். பகிர்ந்தமைக்கு நன்றி.
thanks ismail
வணக்கம் சங்கர்
நீங்கள் இணைத்திருந்த ஒற்றனை அலைபேசியில் செயலாக்கம் செய்ய முடிய வில்லை.
வேறு ஏதேனும் வழி இருக்கிறதா ?
முடிந்தால் மின்னஞ்சல் செய்யுங்களேன் .
நன்றி
அன்புடன்
சிங்.செயகுமார்
//வணக்கம் சங்கர்
நீங்கள் இணைத்திருந்த ஒற்றனை அலைபேசியில் செயலாக்கம் செய்ய முடிய வில்லை.
வேறு ஏதேனும் வழி இருக்கிறதா ?
முடிந்தால் மின்னஞ்சல் செய்யுங்களேன்//
எனக்கும் அதே பிரச்சனைதான்
இந்த சாப்ட்வேர் S60 platform கொண்ட Symbian Second Edition அலைபேசிகளுக்கு மட்டுமே மேலும்நீங்கள் பயன்படுத்துவது Symbian third Edition i am try to get dont worry
thanks.
உங்கள் பதிவை
http://kadakam.wordpress.com/ இங்கே
திருடப்பட்டிருக்கிறது.
Post a Comment