Sunday, July 20, 2008

இந்தியர்களுக்கு அரசியல் நேர்மை இல்லை


நம்நாட்டில் பஞ்சம் இருக்கிறது.ஆனால் நாட்டில் கட்சிக்கு பஞ்சமில்லை.நேர்மையான அரசியல்வாதிகள் இல்லை,காமராஜர் என்கிற பெயர் வரலாற்றில் மட்டுமே இருக்கிறது.
நம் அரசியல்வாதிகள் என்றாலே முதலில் ஞாபகம் வருவது ஊழல்.இவர்களை சொல்லியும் குற்றமில்லை ஏனென்றால் மக்களுக்கு போதிய விழிப்புனர்வு இல்லை.
இந்த விழிப்புனர்வு இருந்தால் அரசியல்வாதிகளின் கதி அதோகதிதான்.இந்த விழிப்புனர்வை ஏற்படுத்த யாரும் முன்வரவில்லை.எந்த ஒரு மந்திரியும் அவருடைய வேலையை ஒழுங்காய் செய்வதில்லை.
எந்த ஒரு இந்திய குடிமகனும் அவருடய வேலையை ஒழுங்காய் செய்வதில்லை (நான் அந்த சங்கர் இல்லீங்கோ)இந்தியர்களுக்கு இது பழகிபோய்விட்டது.
ஆனால் பேச்சிக்கு பேச்சி இந்தியா வல்லரசு நாடுகள் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்று வீன்பேச்சி வேறு அட எனக்கு நம்பிக்கையில்ல இந்த போலி அரசியல்வாதிகளை போட்டுதள்ளனும்.
போறாததுக்கு குடும்ப அரசியல் வேறு!அட நம்ம மாநிலத்த சொன்னேங்க.ஒரு போக்குவரத்து மந்திரி,அவரது வேலையை ஒழுங்காக செய்கிறாரா?.இன்றும் நாறிப்போன பொதுகழிப்பிடங்கள் இருக்கத்தான் செய்யுது,
அட பஸ்ஸில் அப்படித்தான் தொங்கிகிட்டு போகிறார்கள்.அப்ப இன்னும் பேருந்து போறாததையே காட்டுகிறது.அப்ப தயவுசெய்து இந்தியா வல்லரசாகிரத பத்தி பேசாதீங்க..ப்ளீஸ்.வெளிநாட்டுக்காரன் கேட்கிறான். is it this is indian standard?அவன் கேட்கும்போது மானம் போகுது.
அட நம்மகிட்ட என்ன உலகத்தரம் இருக்கு?வீதிக்கு வீதி பேசிதான் சாவுரான் நம்ம ஆளு.மக்களுக்கும் இது பழகிவிட்டது.கல்வியறிவு விழிப்புனர்வு மிககுறைவு.என்ன ஆதரிச்சீங்கன்னா கலர் டீவி இலவசம்.ஒரு தலைவரின் அறவிப்பு அப்படீயே அனைத்து மக்களும் அவர் பக்கம் போய்விடுகிறார்கள்.
கேட்டால் அரசியல் சானக்கியன்.யாருக்கும் நேர்மையில்லை.நேர்மையென்றால் கிலோ எவ்வளவு என்று கேட்கிறார்கள்.இதை படிப்பவர்கள் சொல்லுங்க இதற்கு என்னதான் தீர்வு என்ன செய்தால் நம் அரசியல்வாதிகளுக்கு நேர்மை வரும் நீங்களே சொல்லுங்க,

7 comments:

Darren said...

இப்படியெல்லாம் உண்மையை பேசினீங்கனா, உடனே ஒரு group, வெளிநாட்டில் உட்கார்ந்து கொண்டு இந்தியாவை கேவலமாக பேசுவது ஒரு பேஷன் என்று சொல்லும்.. அரசியல்வாதியை விட்டுங்கள்,நம்மில்(இந்தியர்கள்) எத்தனை பேர் நம் தவறுகளை சுட்டிக்காட்டுபவர்களை மதிக்கிறோம்..ஒரு அமெரிக்கனிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, அணு ஒப்பந்தத்தை பற்றி பேசினேன் ஆனால் அவனுக்கு அது பற்றி தெரியவில்லை, உடனே அவன், தரண், என் அறியாமையை மன்னித்து விடு என்றான்..ஒரு இந்தியனாக இருந்திருந்தால்,இப்படிச் செய்வானா???

மாற வேண்டியது அரசியல்வாதிகள் மட்டுமல்ல, நம்முடை குழந்தை வளர்ப்பு முறைதான். போலித்தனமான வாழ்க்கை வாழ கற்று கொடுத்துவிட்டு பிறகெங்கே நேர்மை...

Anonymous said...

//இந்தியா வல்லரசு நாடுகள் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்று வீன்பேச்சி வேறு அட எனக்கு நம்பிக்கையில்ல இந்த போலி அரசியல்வாதிகளை போட்டுதள்ளனும்.//

kalai pudunka vendum

Anonymous said...

//நம் அரசியல்வாதிகள் என்றாலே முதலில் ஞாபகம் வருவது ஊழல்.//

100% correct

சின்னப்பொண்ணு said...

கல்வியறிவு விழிப்புனர்வு மிககுறைவு

I agree with you.

Anonymous said...

நம்நாட்டில் பஞ்சம் இருக்கிறது.ஆனால் நாட்டில் கட்சிக்கு பஞ்சமில்லை.நேர்மையான அரசியல்வாதிகள் இல்லை

இந்த போலி அரசியல்வாதிகளை போட்டுதள்ளனும் :))))))))))))

தென்றல்sankar said...

உண்மைதான் தரன் நமது பிள்ளை வளர்ப்பு மாற்றபடவேண்டியதுதான். ஆனால் நான் இந்தியாவை கேவலமாக சொல்லவில்லை என்னுடைய ஏக்கத்தை மட்டுமே சொன்னேன்.தங்க‌ள் க‌ருத்திற்கு
ந‌ன்றி.

தென்றல்sankar said...

தங்க‌ள் க‌ருத்திற்கு
ந‌ன்றி பாரதி