Saturday, July 26, 2008

சீரழியும் தமிழ் கலாச்சாரம்


இது தமிழ்நாட்டில் நடந்த குத்தாட்டம் மேடை நிகழ்ச்சி.இதுவரை நான் பார்த்ததில்லை அப்படி ஒரு ஆபாசம்.அதுவும் ஒரு மேடை நிகழ்ச்சியில் செய்கிற அட்டூழியம்.இதை எப்படி அந்த ஊர்மக்கள் அனுமதிக்கிறார்கள் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.அந்த ஊர் இளைஞர்கள் அப்படித்தான் ஜொல் வழிந்து பார்த்துகொண்டிருக்கிறார்கள்.

இது புதுக்கோட்டை மாவட்டம் பூவற்றகுடி அப்படித்தான் பின் உள்ள பேனரில் உள்ளது இதில் இன்னும் கொடுமையான செய்தி என்னவென்றால் கோவில் திருவிழாவுக்காக ஏற்பாடு செய்யபட்ட கலைநிகழ்ச்சியாம்.அதுவும் அதற்கு ஏற்பாடு செய்தவர்கள் சிங்கை,மலேசியா,அபுதாபி வாழ் அதிரடி அம்பாள் தொண்டர்கள்,என பின்னுள்ள பேனரில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

மிகவும் வருத்தமாக உள்ளது.இப்படி கோவில் நிகழ்ச்சியென்று அம்பாள் படத்தை பின்னுள்ள பேனரில் போட்டு படத்தின் முன் இப்படியெல்லாம் செய்கிறார்கள்.ஒருதடவை நடிகை குஸ்பு ஏதோ மேடைநிகழ்ச்சியில் சாமி
சிலை முன்பு செருப்புகாலுடன் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்தார் அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என ஒரு வாரப்பத்திரிகையில் படித்ததாக ஒரு ஞாபகம்.அந்த போராட்ட நாய்கள் இப்போது எங்கு போனார்கள்.இப்படி செய்வது அல்லாமல் இந்த குத்தாட்டத்தை சிடியில் காபி செய்து காசு பார்த்துகொண்டிருக்கிறது, ஒரு வியபாரகும்பல்.இப்படியே போனால் நமது தமிழ்நாட்டு கலச்சாரம் சீரழிந்துவிடும்.

நான் அரிசந்திரன் மாதிரி பேசல இப்படியேபோனால் தமிழ்நாட்டு இளைஞர்களின் காலம் கேள்விக்குறியாகிவிடும்.சமூக நலத்தோட பார்த்தால் இவர்கள் செய்வது மிகதவறு.ஆனால் இப்படியும் பெண்கள் பொது இடங்களில் தங்களை தொட அனுமதிப்பார்கள் என இதை பார்த்துதான் தெரிந்துகொண்டேன்.ஆனால் அவர்கள் சூழ்நிலை என்ன என எனக்கு தெரியாது. இதை ஒரு பிழப்பாக தேர்வு செய்வது கையாலாகாதனம்.இந்த நிகழ்ச்சி சில பேருக்கு முன்பே தெரிந்திருக்கலாம்.

ஆனால் எனக்கு இப்போதுதான் தெரியும்.இந்த சிடி பிஸினஸ் எக்ஸ்போர்ட்டும் நடந்துகொண்டிருக்கிறது.இங்கு இந்த சிடியின் விலை $6 சிங்டாலர்.அட்டன்ஸ் ஒன்லி பதிவாகிவிடும் என்பதாலயே மிக குறைவாக வீடியோவை வெட்டி பதிவேற்றம் செய்தேன்.


27 comments:

வடுவூர் குமார் said...

ஹூம்!!
இனிமே யாராவது நன்கொடை என்று வரட்டும்.... போய் இதை முதலில் பாருங்கப்பா என்றுூங்க சுட்டியை கொடுக்கிறேன். :-))

தென்றல்sankar said...

குமார் அண்னே கரீட்டா சொன்னீங்க.நான் கலை நிகழ்சி நடத்துவது தவறு என்று சொல்லவில்லை.கலை நிகழ்ச்சியில்லாமல் திருவிழா இல்லை என்பது எனக்கு தெரியும். ஆனால் இப்படி செய்வது சரியா சாமி படம் முன்னாடி ம்ம்ம்ம்...எப்பத்தான் நம்ம மக்கள் விழித்துகொள்ளுமோ!

மங்களூர் சிவா said...

/
சிங்கை,மலேசியா,அபுதாபி வாழ் அதிரடி அம்பாள் தொண்டர்கள
/

வெறும் அதிரடி இல்ல !!
மகா அதிரடி
:(((

தென்றல்sankar said...

சிவா நன்றி தங்கள் முதல் வருகைக்ககு!

Bleachingpowder said...

//அந்த போராட்ட நாய்கள் இப்போது எங்கு போனார்கள்//

அவங்க எங்கேயும் போகல. அவர்கள் நடத்தும் பொதுகூட்டத்தில், தலைவர்கள் வரும் வரை மக்களை ஒரே இடத்தில் உட்கார வைக்க, இதேப் போல் தான் கலை நிகழ்ச்சி என்ற பேரில் ஆட்டம் போடுவார்கள்.

ரங்குடு said...

சினிமாவில் காட்டுவதை நேரில் செய்து காட்டுகிறார்கள்.
மேல் நாடுகளில் கூட இவ்வளவு கேவலமாக நான்
பார்த்த தில்லை. என்ன செய்வது? இவர்களை எல்லாம்
சுனாமி அல்லது எய்ட்ஸ் என்று பெரிய அளவில்
வந்து தாக்கினால் தான் விடிவு.

சின்னப் பையன் said...

அடப்பாவிகளா!!! படு கேவலமாக இருக்கிறது....

தென்றல்sankar said...

Bleachingpowder/ rangudu ச்சின்னப் பையன் /thanks for your comments.

Unknown said...

இதை ரிக்கார்ட் டான்ஸ் என்றும் சொல்வார்கள்.சின்ன நகரங்களில் நடக்கும் கோவில் திருவிழாவில் நடைபெறும் 'குறவன்,குறத்தி டான்ஸ்'(கரகாட்டம்?)இன் அடுத்த பரிமாணம் இது.சினிமா பாட்டை ரிக்கார்டில் போட்டுவிட்டு ஆபாசமாக அங்கங்களை அசைத்து ஆடுவது.
பொதுவாக இதில் ஆடும் நடன கலைஞர்கள்??? ஒரு நிதானமான போதையில் இருப்பதுடன், அது குறைந்து விடாமல் இருக்க ஊத்திக்கொண்டே இருப்பார்கள்.அதில் ஆடும் பெண்கள் மேடையில் மட்டுமல்ல மேடைக்கு கீழேயும் ஆடவர்களை தங்கள் உடலை தொட விட்டு ஒரு பக்கம் கலெக்ஷன் கட்டி கொண்டிருப்பார்கள்.;-)

Unknown said...

//அதிரடி அம்பாள் தொண்டர்கள்//


சரியா தானய்யா சொல்லி இருக்கான்க.;-)

SurveySan said...

ஹ்ம்.
அழிந்து வரும் கிராமீய கலைய வளக்கராங்க, வுடுங்க.

;)

தென்றல்sankar said...

இருந்தாலும் நான் இப்படி ஒரு ரெக்காடான்ச பார்த்ததே இல்லை.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

கிரி said...

என்ன கொடுமை இது... படு கேவலமாக இருக்கிறது.. படுக்கை அறையில் செய்வதை எல்லாம் பப்ளிக்கா செய்து கொண்டு இருக்கிறார்கள்.

இப்படி ஒரு கேவலமான நிகழ்ச்சியை என் வாழ்நாளில் பார்த்தது இல்லை.... நீங்கள் கேட்ட கேள்வியை நானும் கேட்கிறேன்.. குஷ்பூ விசயத்தில் ஊரெல்லாம் வழக்கு போட்டவர்கள் ..கடவுள் மனம் புண் பட்டதாக திட்டியவர்கள் கலாச்சாரம் கேட்டு விட்டதாக வாய் கிழிய பேசியவர்கள்..எல்லாம் எங்கு போய் தொலைந்தார்கள்..

இதை பார்த்து மனசே ஆறலைங்க...

இந்த கொடுமையையே சகிக்க முடியலை இதுல நீங்க எடிட் பண்ணியதாக வேறு கூறுகிறீர்கள் ...தலை சுத்துது

அந்த மேடையில் இருக்கிறவங்க எல்லாரையும் குண்டு போட்டு சாகடித்தா தான் சரியா வரும்..

எங்கெல்லாமோ குண்டு வைக்கிறாங்க...இந்த இடத்துல யாராவது வையுங்கப்பா

Anonymous said...

இது வெகுகாலமாக நடக்கிறது. படிப்பறிவற்ற (சில படித்த) விடலைகள் பெரும் ஆர்வமுடன் எதிர்பார்க்கும் வருடாந்திர பண்டிகை நிகழ்வு ;)

தென்றல்sankar said...

//இந்த கொடுமையையே சகிக்க முடியலை இதுல நீங்க எடிட் பண்ணியதாக வேறு கூறுகிறீர்கள் ...தலை சுத்துது //


கிரி அண்னே!
நீங்க இதுக்கே இப்படி சொல்லுறீங்க நீங்க அந்த சீடிய முழுமையா பார்த்தீங்கன்னா அவ்வளவுதான் அவ்வளவு அட்டூழியம் நான் சினிமாவுக்கு சென்சார் அதிகாரிபோல் முழுவதும் பார்த்துவிட்டுதான் அதில் கொஞ்சம் வெட்டி போட்டேன்.

Bleachingpowder said...

// நான் சினிமாவுக்கு சென்சார் அதிகாரிபோல் முழுவதும் பார்த்துவிட்டுதான் அதில் கொஞ்சம் வெட்டி போட்டேன்//

நீங்க பன்றது கொஞ்சம் கூட நல்லாயில்ல, நீங்க மட்டும் Full ஆ பாத்துட்டு எங்களுக்கு சின்ன பிட்ட மட்டும் காட்றீங்க :-)

நாங்களும் Full ஆ பார்த்தாதானே நல்ல தீர்ப்பா சொல்ல முடியும். சீக்கரமா அந்த Fileல அப்லோட் பண்ணுங்க. அசிங்கமான சீன் ஏதாவது வந்தா நாங்க கண்ணை மூடிக்குவோம்.நம்புங்க.

குசும்பன் said...

நண்பரே அந்த சீடியை என் முகவரிக்கு அனுப்பினால் அது எந்த ஊரு என்றும் அதை பார்த்தவர்கள் யார் யார் இது போன்ற பல அறிய தகவல்களை கண்டுபிடித்து உங்களுக்கு தருகிறேன்.

தென்றல்sankar said...

உண்மையிலேயே நீங்கள் குசும்பன் தான்
ம்ம்ம் பார்க்கலாம்.

தென்றல்sankar said...

பிலிச்சிங் ப‌வுடர் ரொம்ம ஃபீல் பன்னுராரு.

அது ரொம்ப‌ மோச‌மா இருக்கு நீங்க‌ பார்த்து கெட்டு போயிடாதேங்க‌.நான் சென்சார் அதிகாரி என்ப‌தால் அதை பார்க்க‌ நேரிட்ட‌து.;))

குசும்பன் said...

// Bleachingpowder said...
நீங்க பன்றது கொஞ்சம் கூட நல்லாயில்ல, நீங்க மட்டும் Full ஆ பாத்துட்டு எங்களுக்கு சின்ன பிட்ட மட்டும் காட்றீங்க :-)
//

என்னது பிட்ட காட்டுறாரா எங்க எங்க எங்க?
சாரி பழக்க தோசம்:)))
****************************
தென்றல்sankar said...
அது ரொம்ப‌ மோச‌மா இருக்கு நீங்க‌ பார்த்து கெட்டு போயிடாதேங்க‌.நான் சென்சார் அதிகாரி என்ப‌தால் அதை பார்க்க‌ நேரிட்ட‌து.;))///

நாங்களும் ஒரே ஒரு முறை பார்த்துவிட்டு எப்படி சென்சார் அதிகாரி ஆவது என்று இந்த சீடிய வெச்சு பாடம் கத்துக்குறோமே!!!

அதீத ஆர்வத்துடன்
சென்சார் அதிகாரி ஆகும் முயற்சியில்
உங்கள்
குசும்பன்

குசும்பன் said...

Bleachingpowder said...
அசிங்கமான சீன் ஏதாவது வந்தா நாங்க கண்ணை மூடிக்குவோம்.நம்புங்க.//

ஐய்யா பிளீச்சிங்பவுடர்...கண்ணை மூடிக்குவோம் என்று சொன்னீங்க ஆனா யாரு கண்ணை என்று சொல்லவே இல்லையே!!!
அதனால் அவரை நம்பாதீங்க.என்னை ”தாராளமாக” (இந்த சீடியை போல) நம்பலாம்.

Unknown said...

Hey Did u guys see the Karagattam which is still be in the part of Thiruvizha...In that they used all Ketta vaarthai and give some very sexy movements....In villages women also watched this. But guess its too vulgur...I am not sure I can see this video in my office.. :))Athanala video va veetula paathutu appram comment podren

சிவத்தமிழோன் said...

பண்பாட்டைக் காக்க இளையோர் களமிறங்குதலே விழிப்புணர்வு என்று கருதுகிறேன். அந்த இளையோர் தலைமுறையை சீரழிக்கும் இதுகள் எப்படி கோயில் பெயரில் அரங்கேறியது என்று நெஞ்சை பிளக்கும் கேள்வி என்னுள் எழுந்துள்ளது. தங்களின் தகவலால் இதுபோல் இனி நடக்காமல் இருக்க விழிப்புணர்வு கொள்வோமாக. நடந்த தவறுக்கு பொறுப்பு யாரோ அவர்களை உரியமுறையில் சமூகத்திற்கு வெளிக்கொண்டுவர வேண்டிய பொறுப்பு நிச்சயம் எங்களிடம் அல்லாமல் வேறுயாரிடமும் அல்ல.
நன்றி

தென்றல்sankar said...

Mr sivathamizahan thanks for your comment.

உண்மைத்தமிழன் said...

கொடுமை.. தெய்வத்தை முன் வைத்து மனிதன் ஆடும் ஆட்டங்களில் இதுவும் ஒன்று.. என்ன செய்வது? தடுக்க வேண்டியது அரசு நிர்வாகம்தான்.. குறட்டைவிட்டுத் தூங்கிக் கொண்டிருந்தால் இப்படித்தான் நடக்கும்..

பின்குறிப்பு : குசும்பன் கேட்டிருப்பதைப் போல அவருக்கு சிடியை பார்சல் செய்துவிடாதீர்கள்.. ஒரு பிரேமுக்கு ஒரு பதிவு என்று போட்டு எங்களை கொன்றுவிடுவார்.. ஜாக்கிரதை..

MADURAI NETBIRD said...

இது கலை நிகழ்சியா போங்க கலவி நிகழ்சிங்க. எப்படிஎல்லாம் சமுதாயத்தை சிரளிகனமோ.......................

Unknown said...

பதிவுலக நன்பர்களே - இந்த விவாதத்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்களேன் - 1

இதுவரை நான் சந்தித்த சமுகத்தின், படித்த/அறிந்த விசயங்களில் தாக்கத்தில் எனக்கென்று சில கருத்துகள் அல்லது குழப்பங்கள் உருவாகி இருக்கிறது. இதில் சரியானவை அல்லது பெருபாண்மையானவருக்கு நன்மை ஏற்பட கூடியவை பற்றி அறியும் சிறு முயற்ச்சி தான் இந்த பதிவு.

http://oviya-thamarai.blogspot.com/2009/06/1.html