Wednesday, October 1, 2008

நண்பர்களே ப்ளீஸ்

நண்பர்களே இந்த பதிவு நம் நண்பர்களில் சில நண்பர்களின் என்னம் மிகவும் கெட்ட என்னமாக இருக்கிறது அவர்களை பற்றி விளக்கவே இந்த பதிவு.
ஒரு சில நண்பர்களை மட்டுமே குறிப்பிட்டு சொல்கிறேன்.உதாரனத்திற்கு நான் எனது வியாபரத்திலோ அல்லது எனது அலுவலக வேலையிலோ வளர்ச்சி அடைகிறேன் என வைத்துகொள்வோம் அதை கண்டு சில நன்பர்கள் மிகவும் வருத்தமடைகிறார்கள்.ஏன் சில நன்பர்கள் என்னிடம் பேசுவதை கூட நிறுத்திவிட்டார்கள்.


இதற்கு நான் சொல்லும் பதில் அவரவர் திறமை அவரவர் கையில் இதற்காக பொறாமைபட்டு என்ன செய்ய முடியும்.
மர்றும் சில நண்பர்கள் நமக்கு தெரிந்ததை மற்ற நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மறுப்பது,ஏனென்றால் பகிர்ந்து கொண்டால் அவன் பெரிவனாகிவிடுவான் என்ற என்னம். தயவவு செய்து உங்களுக்கு தெரிந்ததை தயவுசெய்து உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.அப்படி பகிர்ந்து கொண்டு, அவர் உயர்ந்து சென்றால் அது உங்களுக்குதான் பெருமை.

அப்படி எனது நன்பர் என்னிடம் சிலவற்றை பகிர்ந்திருந்தால் நான் பலவற்றை எட்டி பிடித்திருக்கமுடியும்.
இதை அவருடைய தவறு என்று நான் சொன்னால் நான்தான் முட்டாள்.ஆனால் ஏன் எனது நண்பர் என்னிடம் பகிர்ந்து கொள்ளவில்லை.ஏனென்றால் அவருடைய மனதில் அழுக்கு இருந்திருக்கிறது.ஒரு தேர்வு எழுதுகிறோம் அந்த தேர்வில் தோல்வி அடைகிறோம்.உடனேயே அந்த தேர்வு எழுதுவதையே கைவிடுவது மகாமுட்டாள்தனம்.முயற்சி என்பதை கடுகளவேனும் பயன்படுத்தவேண்டும்.
அப்படி தேர்வு எழுதுவதை கைவிட்டவர்கள் கதிகலங்கி நிற்கிறார்கள் இது சிலபேருக்கு புரியும்.தயவு செய்து முடிந்தால் உங்கள் நண்பரை ஊக்கபடுத்துங்கள்.தயவுசெய்து காயப்படுத்தாதீர்கள்.

நான் பெருமைக்காக சொல்லவில்லை நான் அப்படி ஊக்கப்படுத்தி சில நண்பர்களை பார்க்கும் போது எனக்கு அளவிள்லா மகிழ்ச்சி.


யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

2 comments:

Muthu Kumar N said...

நண்பணின் முன்னேற்றத்தை கண்டு பொறாமைப்படுபவர்கள் உண்மையான நண்பர்களே அல்ல, அவர்களை பற்றி கவலைப்படாமல் நீங்கள் உங்கள் குறிக்கோளை நோக்கி வெற்றி ஊக்கத்தோடு முன்னேற வாழ்த்துகள்.

Praveenkumar said...

வெற்றி வேற்கை (நறுந்தொகை)

தேம்படு பனையின் திரள் பழத்து ஒரு விதை
வானுற ஓங்கி வளம் பெற வளரினும்
ஒருவருக்கு இருக்க நிழல் ஆகாதே!

பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர்

தெள்ளிய ஆலின் சிறு பழத்து ஒரு விதை
தெண்ணீர் கயத்துச் சிறுமீன் சினையினும்
நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை
அணிதேர் புரவி ஆள் பெரும் படையொடு
மன்னர்க்கு இருக்க நிழல் ஆகும்மே!

சிறியோர் எல்லாம் சிறியரும் அல்லர்!