
என்ன கொடும கிரி இது நானும் பார்த்தாலும் பார்த்தேன் இப்படி ஒரு புரட்சி பெண்னை பார்த்ததில்லை.இவர் தமிழ் பெண்னா என்று எனக்கு சந்தேகம் வருகிறது.எந்த ஒரு தமிழ் பெண்னும் இப்படி எழுதி நான் பார்க்கவில்லை இனி பார்க்க போவது இல்லை.கருத்து சுதந்திரம் என்னும் பேரில் பெண்களுக்கு கலங்கம் ஏற்படுத்துகிறார்.வலிக்கிறது எதற்காக என்ன ஒரு கர்வம் கேட்டால் நான் புரட்சி பெண்.என்ன புரட்சிபெண் ஏன் சொல்கிறேனென்றால்,
சமீபத்தில் ஒரு பதிவு(http://thamizachikirukkalkal.blogspot.com/)அவருடைய தமிழச்சியின் கிருக்கல்கள் வலைப்பூவில் ஆண்களை கேலி செய்து ஒரு பதிவு,அதன்
தலைப்பை கூட நான் போட விரும்பவில்லை பகுத்தறிவு என்று சொல்லிகொண்டு ஏதேதோ பினாத்திகொண்டு வருகிறார் வேறொருவலைப்பூவில்.நன்பர் கிரியின் கருத்து எனக்கு மிகவும் பிடித்து இருந்தது.
அவருக்கு மிகவும் கோவம்தான் ஆனால் அவர் காட்டி கொள்ளவில்லை.எதற்கு எழுத உங்களுக்கு உரிமை இருக்கும் போது மறுக்க எனக்கும் உரிமை இருக்கிறது.ஆனால் மறுப்பதை நான் வாடிக்கையாக்கி கொள்ள விரும்பவில்லை.இதில் தமிழச்சி சொல்லியிருந்தார்.
//உண்மைதான். நான் சொல்ல வந்த விடயங்கள் பல நேரங்களில் கும்மி அடிப்பவர்களால் ஆபாசமாக இருப்பது போல் திசை திருப்பப்பட்டிருக்கிறது.//
இதில் இளையகவி என்கின்ற ஜால்ரா வேறு.இதில் கும்மிஅடிப்பவராக தமிழச்சி கூறியிருப்பது இளயகவியத்தான் என நான் கருதுகிறேன்.கும்மி அடிப்பவரால் மட்டுமே அந்த பதிவை பாராட்டமுடியும்.இன்னும் சொல்ல போனால் சிலபெண்களுக்கு கூட நீங்கள் எழுதுவது எரிச்சல் மூட்டக்கூடும்.சரி புரட்சிபெண்னே! எத்தனை பென்கள் இந்த பதிவிற்கு பாராட்டு தெரிவித்துருக்கிறார்கள்.
இதோ கிரி சொன்னது
கிரி said... தமிழச்சி நீங்கள் சிறப்பாக கவிதை எழுதுகிறீர்கள் எதை பற்றியும் கவலைப்படாமல் எழுதும் உங்கள் தைரியத்துக்கு என் பாராட்டுக்கள். என்னால் உங்கள் கருத்தோடு ஒத்து போக முடியவில்லை என்றாலும் ஒருத்தர் தனித்து தெரியும் போது பாராட்டுவதில் என்றும் நான் ஈகோ பார்ப்பதில்லை.
நீங்கள் பெண்கள் பற்றி தைரியமான கருத்துக்களை முன் வைக்கிறீர்கள் பாராட்டுக்கள், அதையே ஏன் ஆபாசமான கவிதைகளாகவும் (நீங்கள் ஆபாசமாக அதை கருதவில்லை) முரட்டு தனமான எழுத்துக்களாகவும் எழுதுகிறீர்கள். சாதரணமாக எழுதினால் யாரும் அதை சீண்டுவதில்லை என்பதாலா! ஏனென்றால் நம் மக்களிடையே (என்னையும் சேர்த்து) நல்ல விசயங்களை கூறினால் அதை கவனிப்பதற்கு ஆள் இருக்க மாட்டார்கள். வித்யாசமாக எதாவது முறையில் சொன்னால் மட்டுமே அதை கவனத்தில் எடுத்துக்கொள்கிறார்கள். உங்கள் பதிவை பலரும் படிப்பது
உங்களுக்கு அதிகமாக வருகை இருப்பது அனைத்துமே நீங்கள் பெண் என்பதால் தான் என்பது கருத்து (அதற்காக உங்கள் எழுத்தை நான் குறை கூறவில்லை). இது உங்களுக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். பலர் உங்கள் எழுத்துக்கள் விரும்பி வரலாம் ஆனால் பெரும்பான்மையானவர்கள் வருவது நீங்கள் பெண் என்பதால் தான். என்னுடைய கணிப்பு தவறாகவும் இருக்கலாம். பொதுவாக எல்லோரும் நினைப்பது நாம் நினைப்பது சரி என்று, பின்னாளில் வேறு எதாவது அனுபவத்தால் இது இல்லை என்று மாறலாம் அல்லது இதே நிலை உறுதிப்படலாம்.
நான் என்னை யோக்கியன் என்று கூறவில்லை, ஆனால் கண்டிப்பாக மோசமானவன் கிடையாது :-) உங்கள் கருத்தை சொல்லும் முறையில் இந்த நிமிடம் வரை எனக்கு உடன்பாடு இல்லை, இனிமேலும் அது எனக்கு வராது என்றே நம்புகிறேன். உங்கள் கருத்தை மாற்றுங்கள் என்று உங்கள் சுதந்திரத்தில் தலையிட எனக்கு உரிமை இல்லை, அதே போல கூறினால் நீங்களும் மாற்றி கொள்ள போவதில்லை.
ஆனாலும் நான் கூறுகிறேன் :-) யோனி குறி வன்புணர்ச்சி போன்ற நீங்கள் கூறும் பகுத்தறிவு (உங்கள் பார்வையில்) செய்திகள் பலரை கிளர்ச்சியடைய செய்கிறதே தவிர நீங்கள் அதன் மூலம் சொல்ல வந்த உள் கருத்தை புரிந்து கொண்டவர்கள் மிக சிலரே என்பது என் தனிப்பட்ட கருத்து. பாராட்டுபவர்கள் எல்லாம் உண்மையானவர்கள் கிடையாது... பாராட்டாதவர்கள் எல்லாம் உங்கள் கருத்துக்கு எதிரிகள் கிடையாது.
அன்புடன்
கிரி
நன்றி கிரி உங்களுடைய கருத்து முற்றிலும் உண்மை.