
அட என்னப்பா நீங்களும் உங்க அரசியலும்.
நாட்டு நடப்ப பத்தி பேசனும் அப்படினு ரொம்ப ஆசையா இருக்கு ஆனா அதபத்தி பேசனும் அப்படினு வரும்போது அந்த வார்த்தை முட்டுது.என்னா குனா கமல் மாரி ஆரம்பிச்சிடனு பார்க்கரீங்களா? 2ஜி 3ஜி 4ஜி ஏதேதோ ஊழல்னு சொல்லுரானுங்க ஒரு எழவும் புரியல இந்த மக்களுக்கு.அடுத்த முதல்வர் ரெடியாயிட்டுருக்கார்.கூவத்த சுத்தபடுத்துரார் ஆனால் குப்பபோடுபவர்களை ஊக்க படுத்துரார்.இதுவரைக்கும் எந்த அபராதமோ குப்பபோடுபவர்களுக்கு எதிராக அதிகாபூர்வமாக அறிவிக்கபடவில்லை.அறிவித்தாலும் ஒரு பிரயோசனமில்லை.போடுரவன் போட்டுகிட்டுதான் இருப்பான் அல்லுரவன் அள்ளிகிட்டுதான் இருப்பான்.சரியான தலமை இல்லாம என் இந்தியநாடு தள்ளாடிகிட்டு இருக்கு.அட வளர்ச்சி நாடுகள் பட்டியல்களில் என்னுடைய இந்திய நாடும் இருக்கனும்னு ஆசைபடுர சரசரி மனுசனுல நானும் ஒருத்தன்.இனிமேல் எவனாவது இந்தியா வல்லரசாகும் அப்படினு சொன்னா அதவிட ஒரு நல்ல நகைச்சுவை வேரெதுவும் இல்லை.அங்க மரவெட்டி கட்சி பொட்டி பொட்டியா வாங்கி குவிக்குது அந்த தலைவர் வார்த்தை ரொம்ப சுத்தமானவர்.பாவம் அந்த அம்மாவும் மாத்தி மாத்தி கத்திகிட்டுதான் இருக்கு.தினமலர்ல படிச்ச நியாபகம் தமிழக அரசின் கடன் ஒருலட்சம் கோடியாம்.அதுக்கு ஒரு முக்கியகாரணம் இலவச திட்டம் தானாம்.அடுத்த தேர்தல் வேர வருது என்ன இலவசமா தரப்போராரோனு மக்கள் மத்தியில ஆர்வம்வேர பெருகுகிட்டு வருது.ஏதோ பன்னுங்கடா.
1 comment:
ஆமாப்பா. என்னவோ பண்ணி தொலைங்க.
Post a Comment