Sunday, March 9, 2008

எனது அனுபவம்

நான் இந்தியாவில் (தமிழ்நாடு) இருந்தவரை ஒரு அறியா பிள்ளையாகதான் இருந்தேன் சிங்கபூர் வந்து 4 வருடம் ஆகிவிட்டது .நிறைய அனுபவங்கள்.அதிக வருத்தங்கள் நாம் காலத்தை அதிகம் வீனாக்கிவிட்டேன் என நினைக்கிறேன்.இப்போது உள்ள சூழ்நிலையில் இளையர்கள் கட்டாயம் ஏதேனும் ஒரு பட்டபடிப்பு பெற்றே தீரவேண்டும். ஆனால் நமது நாட்டில் தான் சொல்லுவார்கள்.தமிழை மட்டும் தான் படிக்க வேன்டும் என சொல்லுவார்கள் ஆனால் அவர்கள் பேரன் பிள்ளைகளை அமெரிக்கா லண்டன் என படிக்க வைப்பார்கள். நான் அரசியல் பேசவிரும்பவில்லை.தமிழ் எனது தாய்க்குபிறகு அதிகம் நேசிப்பது தமிழைத்தான்.அந்த தமிழ் பேச, படிக்க, எழுத ,தெரிந்தால் போதும்.ஜப்பானில் ஜப்பான் மொழி மட்டும்தான் ஏனென்றால் அவர்களுக்கு அனைவருக்கும் ஜப்பானில் மட்டும் தான் வேலை அதான் அங்கு ஜப்பான் மொழி நிலைத்து நிற்கிறது.தமிழகத்தில் அது இயலுமா? அடுத்த மாநிலத்துக்கு சென்றால் கூட விரட்டிஅடித்து விடுவார்கள்.கட்டாயம் ஆங்கிலம் கற்கவேண்டும்.

4 comments:

வால்பையன் said...

//இப்போது உள்ள சூழ்நிலையில் இளையர்கள் கட்டாயம் ஏதேனும் ஒரு பட்டபடிப்பு பெற்றே தீரவேண்டும்.//

இதில் கட்டாயத்திற்கு வேலையில்லை. காலர் அழுக்காகாமல் வேலை செய்ய விருப்பமுள்ளவர்கள், எதாவது வேலைக்கு தான் போவேன் என்று அடம் பிடிப்பவர்கள் வேண்டுமானால் பட்ட படிப்பு படிக்க வேண்டியது தான்.

//கட்டாயம் ஆங்கிலம் கற்கவேண்டும்.//
மீண்டும் சொல்கிறேன் இங்கே கட்டாயத்திற்கு வேலை இல்லை. திறமை இருந்தால் எந்த நாட்டிலும் நம் மொழியிலேயே தொடர்ப்பு கொள்ளலாம் அவர்களை நம் மொழியை கற்க வைக்கலாம்.
மொழி என்பது தொடர்புக்கு மட்டுமே அதுவே வேலை வாய்ப்பல்லா!

வால்பையன்

தென்றல்sankar said...

வருகை புரிந்த வால்பையனுக்கு நன்றி

தென்றல்sankar said...

அப்படி சொல்லமுடியாது சார் நம்நாட்டில் guide என்பவர்கள் மொழியை வைத்துதான் வேலைபார்க்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

வால்பையன் said...

அதை தான் நானும் சொல்கிறேன் மொழி என்பது தொடர்புக்கு மட்டும் தான்.
அதுவல்லாது நமது தனிசிறப்பே மொழியை விட மேலோங்கி நிற்கும்

வால்பையன்