Monday, May 5, 2008

குருட்டு சாமியாரின் விளக்கம்

குருட்டு சாமியாரின் விளக்கம்.இதற்க்கு ஒரு கதை இருக்கிறது.ஒரு குருட்டு சாமியார் ஒருவர் இரவுநேரத்தில் ஒரு மெழுகுவத்தியுடன் ஒரு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அதை பார்த்த ஒரு இளைஜன் ஏன் அவருக்கு கண் இரன்டுமே தெரியாது ஆனால் அவர் ஏன் மெழுகுவத்தி எடுத்துகொண்டு ஏன் தடுமாரி தடுமாரி சென்றுகொண்டிருக்கிறார்.அவனுக்கு ஏதும் புரியவில்லை அவரிடமே கேட்பது என்றுமுடிவெடுத்தான்.உடனே அந்த சாமியாரிடம் அய்யா உங்களுக்குதான் கண்தெரியாதே?பிறகு ஏன் மெழுகு வத்தி கொண்டுசெல்கிறீர்கள் என்று கேட்டுவிட்டான்.அதற்கு அந்த சாமியார் தம்பி இந்த மெழுகுவத்தி நான் பார்த்து செல்வதற்காக இல்லை மற்றாவர்கள் என் மீது. இடித்துவிடகூடாதல்லவா? அதற்குத்தான் என்று கூறியவுடன் இளையரின் முகத்தில் ஈ ஆடவில்லை.
இதிலிருந்து என்ன தெரிகிறது?.நாம் எப்போதுமே நமது காரியத்தில் கருத்தாக இருக்கவேண்டும்.சும்மா எப்போதுமே அடுத்தவர் மீது பழி போடக்கூடாது.

No comments: