Sunday, May 11, 2008

தமிழ் சினிமாவின் வெற்றி

யார் இது? நம்ம விக்ரமா இது? அதுதான் நமக்கு தெரியுமே! விக்ரம் ஒரு கதாபாத்திரம் என்றால் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவார்.நான் கூட பார்த்துவிட்டு ஏதோ புதுமுக நடிகை போல இருக்கு என ஏமாந்து விட்டேன். விக்ரமின் அடுத்த புராஜெக்ட் கந்தசாமி இயக்குனர் சுசிகணேசன் தயாரிப்பு கலைப்புலி தானு.இந்த திரைப்படம் இதுவரை எந்த தமிழ் சினிமாவும் பெறாத பெருமையை பெருகிறது .கென்யாவில் உள்ள தான்சானியா நகரில் சில காட்சிகள் எடுக்கபட்டது.இயக்குனருக்கு ஆசைதான் இன்னும் சில காட்சிகள் எடுக்க வேண்டும் என்று ஆனால் அங்கு ஏற்படும் கலவரங்களை தொடர்ந்து மூட்டை கட்டுவது என இயக்குனர் முடிவு செய்தார் பிறகு மெக்சிகோ இங்கு சென்று படம் எடுப்பது அவ்வளவு சாதாரன காரியமில்லை.ஏனென்றால் அந்த நாட்டின் அதிபர் உட்பட பல பேரிடம் உரிமை வாங்கவேண்டும் அவர்களும் அவ்வளவு எதளிதாக அனுமதி கொடுத்துவிட வில்லை எதை பற்றிய படம் என்று கேட்ட பிறகு இவர்கள் எடுத்துவைத்திருந்த சிலகாட்சிகளை காட்டியிருக்கிறார்கள்.
நம்ம விக்ரம் நடிப்பை பார்த்துவிட்டடு அசந்து விட்டனர்.மற்றொரு வியப்பான செய்தி அங்குள்ள ஒரு நிறுவனம் விக்ரமின் அடுத்த படத்திற்க்கு ஒப்பந்தம் செய்ததாக ஒரு செய்தி இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை ஆனால் நம் தமிழ் சினிமாவுக்கு பெருமை நம் தமிழருக்கு பெருமை .இந்த பெருமை மூவரையே சாரும் முதலில் கலைப்புலி தானு,சுசிகணேசன்,விக்ரம் இம்மூவரின் முயற்சியால் கந்தசாமியை செதுக்கி கொண்டிருக்கிறார்கள்.காத்திருப்போம் கந்தசாமி வரும் வரை.

1 comment:

Samuthra Senthil said...

தங்களது எழுத்துக்கள் ரசிக்கும்படியாய் இருக்கின்றன. வாழ்த்துக்கள் நண்பரே...!