சிங்கப்பூரர்கள் என்ன
முட்டாள்களா?
சமீபத்தில் ஒரு மலேசிய நன்பர் கேட்ட கேள்வி.
இப்போது உள்ள சுழ்நிலையில்,என்னை விலை,அத்தியாவசபொருட்களின் விலை உயர்வு,இதை வைத்து பார்க்கும்போது.பல நாடுகளில் நடக்கும் போராட்டங்கள்,என்னை விலை உயர்வை எதிர்த்து சமீபத்தில் சிங்கப்பூரின் பக்கத்து நாடுகளான இந்தோனேசியா,மலேசியா,ஆகிய நாடுகளில் கூட பயங்கர ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளது.ஆனால் சிங்கப்பூரர்கள் இதைபற்றி சத்தம் போட்டு பேசியதுகூட கிடையாது.சிலபேர் சொல்வார்கள் சிஙப்பூர் சின்ன நாடு அங்கு போராட்டம் நடத்த முடியாது,பெரிய பிரச்சனையாகிவிடும் அப்படியெல்லாம் இல்லை,
இங்குள்ள சிங்கப்பூரர்களின் அறிவுத்திறன்.உலகநடப்பை புரிந்து கொள்ளுதல்.ஏன் நமது அரசாங்கம்,ஏன் என்னை விலையை ஏற்றுகிறது?நாட்டுமக்களுக்கு சிங்கப்பூர் அரசாங்கத்தின் விலையேற்ற்த்திற்கான விழிப்புனர்வு.அதை சிங்கப்பூரர்கள் புரிந்துகொண்டு சிங்கப்பூரை அமைதிபூங்காவாக காத்து வருகின்றனர்.
இதை புரிந்து கொள்ளாமல் நமது நாட்டிலோ பந்த்,சாலைமறியல், உன்னாவிரதம் என்று வீன்பொழுதை கழிப்பர்.அந்நாட்டு அரசாங்கமும் விலைவாசி ஒருபுறம் இருக்க இவர்களது போராட்டம் என இரன்டிலும்
சிக்கி திக்குமுக்காடும்.
உண்மையில் இப்படி போராட்டம் செய்பவர்களே முட்டாள்கள்.ஆனால் சிங்ப்பூரர்கள் அப்படி இல்லை மிகவும் அறிவாளிகள்.அரசாங்கத்தோடு ஒத்து செல்பவர்கள்.
நமது நாட்டிலோ ஒரு மாவட்டத்துக்கு ஒரு கட்சி இது ஒன்றே போதும் போராட்டம் நடத்த,ஆ வூனா மரத்த வெட்டி சாய்த்துவிடுவது,அட இந்த மரவெட்டி கட்சியபத்தி சொன்னேங்க!எப்போ இந்த கட்சிகள் மத்தியில் ஒருமித்த கருத்து நிலவுகிறாதோ அப்போதுதான் இந்த போராட்டத்துக்கு
ஒரு முடிவுகட்ட முடியும்.ம்ம்ம்ம்
10 comments:
//இந்த மரவெட்டி கட்சியபத்தி சொன்னேங்க//
இப்போ மனிதனையும் வெட்டும் கட்சியா மாறி ரொம்ப நாளாச்சு..
சிங்ப்பூரர்கள் அப்படி இல்லை மிகவும் அறிவாளிகள்.அரசாங்கத்தோடு ஒத்து செல்பவர்கள்.
சிங்கப்பூர் தமிழ்ப் பத்திரிகையும் அப்படித்தான், மிகவும் மிகவும் அறிவாளிகள்.
விலைவாசி உயர்வு பற்றியெல்லாம் எழுதிக் கொண்டிருக்கமாட்டார்கள், தமிழ்ப் புத்தகங்களுக்கு மதிப்புரைகூட எழுதுவதில்லை.
தமிழ்நாட்டு சின்னத்திரை நடிகையின் காதல் என்று அரைப் பக்கத்திற்கு, தமிழ்நாட்டு சினிமா, செய்தி இணைய தளங்களை அப்படியே மேய்ந்து, வெட்டி, ஒட்டி, இடையிடையே சில சொற்களை மட்டும் எழுதுவார்கள்.
100% Desktop Journalism என்பதற்கு எடுத்துக்காட்டும் அவர்கள்தான்.
அப்படிப்பட்ட அறிவாளிகள்.
இதனையும் சேர்த்துப் போற்றிக்கொள்ளும்.
ஐயா! நீங்க சிங்கப்பூரில் தான் இருக்கீங்களா ?
ஜோ ஏன் இப்படி கேட்கிறீர்கள்?
// தமிழ்ப் புத்தகங்களுக்கு மதிப்புரைகூட எழுதுவதில்லை.//
மதிப்புக்குரிய அனானி அவர்களுக்கு
தமிழ் தமிழ்நாட்டில் விட இங்கு தலைநிமிர்ந்து நிற்கிறது.நீங்கள் என்னான்னா..ம்ம்ம் நல்லா தெரிந்து கொண்டு எழுதுங்கள்
//உலகநடப்பை புரிந்து கொள்ளுதல்.ஏன் நமது அரசாங்கம்,ஏன் என்னை விலையை ஏற்றுகிறது?
நாட்டுமக்களுக்கு சிங்கப்பூர் அரசாங்கத்தின் விலையேற்ற்த்திற்கான விழிப்புனர்வு.அதை சிங்கப்பூரர்கள் புரிந்துகொண்டு சிங்கப்பூரை அமைதிபூங்காவாக காத்து வருகின்றனர்.//
இது, புரிந்து கொள்ளுதல் இல்லை கொள்ளிடம் சங்கர். பயம்தான் காரணம். எதிர்கட்சி தலைவர்களுக்கு சில வருடங்களுக்கு முன் நேர்ந்த கதியைப் பற்றி அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். சிங்கப்பூரில் நடப்பது, கட்டுப்படுத்தப் பட்ட ஜனநாயகம். யாரும் எந்தக் கேள்வியும் கேட்க முடியாது. கேள்வி கேட்க முடியாதபோது எப்படி போராட்டம் செய்ய முடியும்? ஒரு நல்ல விஷயம் என்னன்னா, சிங்கப்பூரில் அடிப்படை வசதிகள் அனைவருக்கும் கிடைக்கின்றன. அரசாங்கம் பற்றி எத்தனையோ பேர், அக்கம் பக்கம் பார்த்துகொண்டே குறை சொலவதைக் கேட்டு இருக்கிறீர்களா? டாக்ஸிக்காரர்களிடம் பேசிப் பாருங்கள். கதை கதையாகச் சொல்வார்கள்.
இன்னொரு விஷயம், சிங்கப்பூரையும் இந்தியாவையும் ஒப்பிடுவதே ஒரு அடிப்படைத் தவறு!!
//இது, புரிந்து கொள்ளுதல் இல்லை கொள்ளிடம் சங்கர். பயம்தான் காரணம்.//
அது பயம்னா அந்த பயத்த நம் நாட்டிலும் வரவைக்க வேண்டும்.எதாவது சொன்னா,இது ஜனநாயக ஆட்சி அப்படீன்னு ஒரு பிதற்றல் வேறு,அப்படிபட்ட ஜனநாயக ஆட்சியே நமக்கு தேவையில்லை என்றுதான் சொல்கிறேன்.அரசியல் வாதிக தேர்தல் வாக்குறுதி மட்டும் சொல்லுறது நான் ஆட்சிக்கு வந்தா இந்த தஞ்ஞாவூர சிங்கப்பூரா மாத்தி காட்டுவேன்.எதுக்கு இந்த வசனம்.
//அரசாங்கம் பற்றி எத்தனையோ பேர், அக்கம் பக்கம் பார்த்துகொண்டே குறை சொலவதைக் கேட்டு இருக்கிறீர்களா? டாக்ஸிக்காரர்களிடம் பேசிப் பாருங்கள். கதை கதையாகச் சொல்வார்கள்.//
அட எவ்வளவுதான் செய்தாலும் குறைசொல்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
நான் சிங்கப்பூரை நம்நாட்டுடன் ஒப்பிடவில்லை.ஒப்பிடவும் முடியாது,நம் அரசியல்வாதிகள் தான் ஒப்பிடுகிறார்கள்.
இந்தியாவில் நடக்கும் போரட்டங்களில் பெரும்பான்மை ஒப்புக்காக வெற்று விளம்ப்ரங்களூக்காக நடை பெறுவதைதான் நாம் செய்தித்தாள்களில் பார்ர்க்கும் அன்றாட செய்தியாக உள்ளதே.
ஆர்பாட்டம்,தர்னா, உண்ணாவிரதம் ,கடை, அடைப்ப்பு,வாகன மறிப்பு,தந்திகளை அனுப்புதல்,போஸ்டர் போர்,அறிக்கைப் போர்,........
பல அவதாரங்கள்
தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com
வாங்கோணா வாங்கோ கோவையின் ரேஸ் திருவிழாவை பார்க்க வாங்கோணா..! 20 மறுமொழிகள் | விஜய்
//அது பயம்னா அந்த பயத்த நம் நாட்டிலும் வரவைக்க வேண்டும்.//
இதெல்லாம் நாம போஸ்ட்லயும், பின்னூட்டத்துலயும் சொல்ல சுலபமா இருக்கும். நடைமுறைக்கு, அதுவும் இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டுக்கு ஒத்து வராது.
//அரசியல் வாதிக தேர்தல் வாக்குறுதி மட்டும் சொல்லுறது நான் ஆட்சிக்கு வந்தா இந்த தஞ்ஞாவூர சிங்கப்பூரா மாத்தி காட்டுவேன்.எதுக்கு இந்த வசனம்.//
அரசியல்வாதிங்க மிஞ்சி மிஞ்சி போனா, ஒரு 10-15 நாள் சிங்கப்பூரில் இருந்திருப்பாங்க. அப்பிடிப் போறவங்க எல்லாருக்கும் சிங்கப்பூர் மட்டுமில்ல எல்லா ஊரும் நல்லாத்தான் இருக்கும் :) இந்தியாவில் இருக்குறவங்க எத்தன பேருக்கு சிங்கப்பூர் பத்தி தெரியும்? அதனால அள்ளி விடுற வசனம் அது.
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாதிரி இருப்பதில்தான் பெருமை. உங்களுக்குத் தெரியுமா? ஒரு காலத்துல, ஸ்டாம்ஃபோர்ட் ராஃப்ள்ஸ், சிங்கப்பூர கொல்கத்தா மாதிரி ஆக்குறதுதான் என் லட்சியம்னு சொன்னாரு. அந்தந்த ஊரும் நாடும் அந்தந்த நாடு மாதிரி இருந்தால்தான் சிறப்பு. நீங்க, அடிப்படைக் கட்டமைப்பு ஒண்ண மட்டும் வச்சு சிங்கப்பூர்தான் சிறந்ததுன்னு சொல்றத ஏத்துக்க முடியாது. புழல் சிறையிலயும் எல்லாவித நவீன வசதிகளும் இருக்கு. அதுக்காக, எல்லா ஊரையும் சிறையா மாத்த முடியுமா? :)
//அட எவ்வளவுதான் செய்தாலும் குறைசொல்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.//
அப்போ, குறை எல்லா நாட்டிலும்தான் இருக்கு. 'சிங்கப்பூருக்கே' குறை இருக்கும்பாது, சாதாரண இந்தியாவுக்கு, அதன் சைசுக்கு குறை இருக்கக் கூடாதா?
நான் அரசியல் வாதிகளுக்கு வக்காலாத்து வாங்கவில்லை. அரசியல் வாதிகள் மட்டும் இந்தியா இல்லை.
//நான் சிங்கப்பூரை நம்நாட்டுடன் ஒப்பிடவில்லை.//
நீங்கதான் சொன்னீங்க, சிங்கப்பூரர்களும் அரசாங்கமும் ஒத்து ஒன்றாக இருப்பதாக. அப்படின்னா, அது இந்தியாவுடனும், இந்தியர்களுடனும் ஒப்பிட்டுப் பார்ப்பதாகத்தானே பொருள்?
விஜய் அவர்களே! நான் இந்தியாவை மட்டும் குறை சொல்லவில்லை பக்கத்து நாடுகளையும் சேர்த்துதான் சொன்னேன்.நானும் இந்தியன்தான் எனக்கும் இந்தியாவில்,மேலைநாடுகளில் உள்ளதுபோல் சாலை,போக்குவரத்து, அடிப்படை வசதிகளை எனது தாய் நாட்டில் அனுபவிக்க ஆசைபடுகிறேன். எப்போதும் போராட்டம் மறியல் அடேயப்பா தாங்கமுடியல போராட்டமாக இருந்தாலும் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும்.தஞ்சாவூர் தமிழா நானும் முன்பு உங்க மாவட்டம் தான்.இப்படி ஒட்டுமொத்தமாக நான் இந்தியரை குறைசொல்லிவிட்டேன் என்று கருதவேண்டாம்.உங்களுக்கு ஒன்னு தெரியுமா உங்கள ஒருத்தன் எந்த நாட்டுகாரர் என்றுகேட்டால் என்ன சொல்வீர்கள்.நான் இந்தியன் என்றுதானே சொல்வீர்கள்.ஆனால் ஒரு குரூப் இருக்கிறது அவர்கள் நான் தமிழன் அப்புறம்தான் இந்தியன் என்று சொல்லும்.
Post a Comment