புலிகள் இடத்துக்குப் போய், அவற்றின் கோபத்தைக் கிளறிவிட்ட ஆடவரை அந்தப் புலிகள் கடித்துக் குதறிவிட்டன.சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் குத்தகை ஊழியராகப் பணி புரிந்த நோர்டின் பின் மொன்டொங் (32), நேற்று முன்தினம் பிற்பகல் 12.30 மணி அளவில் இரண்டு வங்காளப் புலிகளால் தாக்கப்பட்டு இறந்தார்.
“இந்தத் தாக்குதலைப் புலிகள் தாமாகச் செய்யவில்லை. புலிகள் கூடத்தில் உள்ள அகழியில் நோர்டின் குதித்தபோது அந்த ஒலியைக் கேட்ட புலிகள் ஆர்வம் காரணமாக அகழிக்குப் பக்கத்தில் ஓடி வந்தன.“துடைப்பக் கட்டையாலும் வாளியாலும் தொந்தரவு செய்தபோதும், புலிகள் ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தன.
“நோர்டின் உரக்கக் குரலில் கத்திய பின்னரே தாக்குதல் தொடங்கியது,” என்று சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தின் உதவி இயக்குநரான திரு பிஸ்வாஜிட் குஹா, நேற்றுச் செய்தியாளர் களிடம் விளக்கினார்.
“நோர்டின் எழுப்பிய உரத்தக் குரலால் பயந்து போன புலிகள், தற்காப்புக்காகவே தாக்கின.
“அப்பொழுது விலங்குப் பராமரிப்பாளர் ஒருவர் அபாய ஒலியை எழுப்பினார்.
“ஏறத்தாழ 30 விலங்குப் பராமரிப்பாளர்கள் ஓடி வந்து பொருட்களை வீசி எறிந்தும் சத்தம் எழுப்பியும் புலிகளின் கவனத்தைத் திருப்ப முற்பட்டனர்.
“அப்பொழுது சில விலங்குப் பராமரிப்பாளர்கள் புலிகளின் கூடத்தைத் திறந்தனர். சுற்றி உள்ள அனைவரும் கூச்சல் எழுப்பி பொருட்களை விட்டெறிந்ததால் பயந்து போய் புலிகள் கூடத்திற்குள் நுழைந்தன.
“உடனடியாக நான்கு விலங்கியல் மருத்துவர்கள் நோர்டினுக்கு முதலுதவி செய்ய முற்பட் டனர்.
அப்பொழுதுகூட அவர் உயிருடன்தான் இருந்தார். ஆனால், புலிகளின் தாக்குதல்களால் நோர்டினுக்குப் பலத்த காயங்கள் ஏற்பட்டன,” என்று அவர் விளக்கினார்.
என்றாலும் பின்னர் அவர் மாண்டார்.நோர்டின¬ன் தலையிலும் கழுத்திலும் தோள் பட்டைகளிலும் புலிகள் பலமாகக் கடித்திருந்தன. அவரது கைகளிலும் புலிகள் கீறியிருந்தன என்று தமிழ் முரசு அறிகிறது.வேலி போன்ற பாதுகாப்பு முறைகளைக் கையாண்டால், சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தின் இயற்கை அழகு குறைந்துவிடும் என்பதால் புலிகள் கூடத்தின் தோற்றம் மாற்றப் படாது என்றும் திரு பிஸ்வாஜிட் சொன்னார்.“
புலிகள் மீது எவ்வித தவறும் இல்லை. அடுத்த ஒரு வாரத்துக்கு அவற்றின் நடவடிக்கை கள் தீவிரமாகக் கவன¬க்கப்படும். சுமார் ஒரு வாரத்தில் இந்த புலிகள் கூடம் மீண்டும் திறக்கப்படும்,” என்றார் அவர்.
No comments:
Post a Comment