Wednesday, December 24, 2008

தமிழச்சியிடம் ஒருமணி நேர உரையாடல்.




நானும் பதிவு போட்டு பல நாட்கள் ஆகிவிட்டன. என்னவோ எழுதவும்தோன்றவில்லை.நேரமின்மை ஒரு காரணம்.நேற்று புதன்கிழமை நான் யாஹோ மெசஞ்சரில் அரட்டையடித்து கொண்டிருந்தபோது தமிழச்சியை ஆன்லைன்லில் பார்த்தேன் அப்போது சற்று பிசியாகவே இருந்தார்.

நான் முதலில் ஹாய் என்று அரட்டையை தொடங்கியபோது வெய்ட் என்ற தமிழச்சியின் பதில்.நானோ சாப்பிடவேன்டும் அப்போது இரவு 10_த்து மணி நான் தமிழச்சியிடம் நான் சென்று தோசை ஊற்றி சாப்பிட்டுவிட்டு 10_த்து நிமிடத்தில் வருகிறேன் என்று சொல்லிவிட்டு (ஏனென்றால் தமிழச்சி பிசியாக இருந்தார்) நானோ தோசை ஊற்றி சாப்பிட்டுவிட்டு மறுபடியும் அரட்டைக்கு வந்தேன்.

என்ன ஒரு ஆச்சர்யம் தமிழச்சியின் அழைப்பு நான் நினைத்து கூட பார்க்கவில்லை அவர் அழைப்பார் என்று.

(ஒகே உரையாடலுக்கு செல்வோம்)

என்னை சில‌பேருக்கு தெரியும் நான் ஒரு ப‌திவில் கூட த‌மிழ‌ச்சியின் ஒரு ப‌திவில் அதிருப்தி அடைந்து அவ‌ரை தாக்கியும் எழுதியிருக்கிறேன்.ம்ம்ம்.. அது அப்போதுள்ள‌ கோப‌த்தாலோ என்ன‌வோ அப்ப‌டி எழுதும் சூழ்நிலைக்கு த‌ள்ள‌ப்ப‌ட்டேன்.இருந்தாலும் நேற்றைய‌ உரையாட‌லுக்கு பிறகு அவ‌ருடைய என்ன‌ம்,ம‌னநிலை,அவருடைய எழுத்தின் நோக்கம் அனைத்தும் அருமையாக விவ‌ரித்தார்.

என்ன‌வோ ஒரு சில வார்த்தைக‌ளில் ந‌ம‌து சென்னை த‌மிழ் விளையாடிய‌து.எப்ப‌டி இந்த‌ த‌மிழ் என்று த‌மிழ‌ச்சியிட‌ம் வின‌விய‌போது சிரிப்பு ம‌ட்டுமே ப‌திலாக‌ இருந்த‌து.சில‌ வெளிநாட்டு வாழ் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளை இந்திய‌ர்க‌ள் என்று சொல்லிகொள்வ‌த‌ற்கு வெட்க்க‌ப்படும் இந்த‌ சூழ்நிலையில் அவ‌ரோ இனைய உலகில் த‌மிழ‌ச்சி என்று தன்னை அடையாளாப்படுத்திகொன்டது அதிர‌வைக்கிறது.

அவ‌ரை புக‌ழ்ந்து பேச‌வில்லை புக‌ழ்ந்து சொல்ல‌ இந்த ப‌திவு போட‌வில்லை.புக‌ழ்ந்து சொல்வ‌து த‌மிழ‌ச்சிக்கு அற‌வே பிடிக்காது.பிரான்சில் இருந்துகொண்டு த‌மிழ்நாட்டின் நிலையை அக்குவேறு ஆணிவேறாக‌ தெரிந்து வைத்துருக்கிறார்.

தமிழச்சியின் எழுத்துபனி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!



தூற்றுவார் தூற்ற‌ட்டும் போற்றுவார் போற்ற‌ட்டும்.

No comments: