Saturday, January 3, 2009

காதலித்து கொண்டிருப்பவர்களும் கடலைபோடுபவர்களும் கொஞ்சம் பாருங்க‌

கடலை என்பது எந்த வித கருத்தோ அல்லது பொருளோ காரியமோ இன்றி ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் பேச்சை அடைக்காமல் நமது மனதுக்கு தோன்றியதை இஷ்டம் போல் அள்ளி விடுவதே கடலை ஆகும்.



இக்கடலையாகப்பட்டது ஒரு ஆனும் ஒரு பெண்னும் இனைந்து செய்வது.இதை ஒரு ஆணும் ஆணூமோ பெண்ணும் பெண்ணுமோ சேர்ந்து கட்டாயம் செய்ய இயலாது.அதற்கு இச்சமூகம் வெட்டி அரட்டை என்று பெயர் வைத்துருக்கிறது.





இன்னொரு நண்பர் ஒருவர் மாதத்திற்கு $100 டாலர் தனது மொபைலுக்கு பனம் கட்டுகிறார்.எல்லாம் கடலை செயல்.



இவ்விசயத்தில் பெண்கள் மிக கெட்டிகாரத்தனமாய் மாதந்தோறும் 20000 எஸ்எம்எஸ்கள் இலவசமாகத்தரும் மொபைல் சேவைகளை பயன்படுத்துகின்றனர்.



அது தவிர மினிமம் பேலன்ஸ் மெயின்டயின் செய்து மிஸ்டுகால் மங்கைகளாகவும் திகழ்கிறார்கள்.இதனால் அவர்களுக்கு பொருளிழப்பு அதிகமில்லை.இதனால் இவர்களது கடலை குறைந்த செலவில் முடிந்து விடுகிறது.


நேரிலோ அது கிடையாது,அதற்காக நீங்கள் மிகவும் சமயோசிதமாக இருக்க வேண்டும்.அவை கடலை போட போடத் தானாகவே கைகூடும்.இல்லையென்றால் விடுங்கல் வேறுயாரும் சிக்காமலா போய்விடுவார்கள்.

இருந்தாலும் நமது சீரிய ஆராய்ச்சியின் விளைவாக அறிந்துகொண்ட சில குறிப்புகள் மட்டும் உங்களுகாக,
கடலை போட சில வழிகள்,



1. நேரில் பேசும் போது கண்ணைபார்த்து பேசவும்.அதிகம் வழியாதீர்கள்.அல்லது கையில் கைக்குட்டை வைத்துகொள்ளவும்.


2.பெண்கள் சொல்லும் மொக்கை ஜோக்குகளுக்கு பி.எஸ்.வீரப்பா போல் சிரிக்கவும் சாகும்வரை சிரிக்க முயலுங்கள் அவர் இனிமேல் உங்களிடம் ஜோக்கே சொல்ல மாட்டார்.




3.அடிக்கடி ஆக்சுவலி என்னும் வார்த்தையை சேர்க்கவும்(ஹீரோயிசத்திற்கு உதவும்).ஆக்சுவலி சேர்த்து பேசுகையில் உங்களை மெத்தபடித்த கணவான் என்று எண்ணக்கூடும்.


4.வாய் கூசாம‌ல் கேட்ப‌வ‌ரை குறித்து புக‌ழ்ந்து பொய் பேச‌வும்.ஓவ‌ர் புக‌ழ்ச்சி உட‌ம்புகு ஆகாது அளந்து புக‌ழுங்கள்(உத‌விக்கு நிறைய‌ காத‌ல் புத்த‌க‌ங்க‌ள் ப‌டித்து அறிவை வ‌ள‌ர்க்க‌லாம்.ஆங்கில‌புத்த‌க‌ங்க‌ள் என்றால் சிறப்பு)


5.பேசும்போது குரங்குசேட்டைகளை தவிர்க்கவும்(காது குடைவது,மூக்கு நோண்டுவது போன்றவை)

6.அடிக்க‌டி உங்க‌ளை ப‌ற்றி பீத்திகொள்ளாதீர்க‌ள்,அதை பூட‌க‌மாக‌ செய்ய‌வும் (அதாவ‌து சுற்றிவ‌ளைத்து)

7.நீங்க‌ள் இத‌ற்குமுன் செய்த‌ லூசுத்த‌ன‌மான‌ சேட்டைக‌ளை குறித்தும் அதன் பின்விளைவுக‌ள் குறித்தும் எக்கார‌ன‌ம் கொண்டும் பேச‌க்கூடாது (உதா‍,லைச‌ன்ஸ் இன்றி போலிசிட‌ம் மாட்டிகொண்டு 13 ரூபாய் கொடுத்து த‌ப்பித்த‌ வீர‌சாக‌ச‌ங்க‌ளை பேச‌வேகூடாது.)


8.எந்த கட்டத்திலும் 'அப்புறம்' என்று கேட்டு விடாதீர்கள் அது கடலையை உடனே நிறுத்திவிடும்.

நன்றி கடலைக்கு வித்திட்ட நண்பர் இளையராஜாவிற்கு

4 comments:

Anonymous said...

konjam piriththu piriththu eluthalaame ... padikka ayarchchiyaaga ullathu :(

தென்றல்sankar said...

mr anani sorry for any inconvinence caused.
thanks for u r coment

Anonymous said...

this story is already written
http://www.athishaonline.com/2008/12/blog-post_594.html pls visit the site

தென்றல்sankar said...

mr anbu this is not my own post i received from email.just i want to share to all.thats all
thanks