Saturday, April 12, 2008

சிலபேர்க்கு தெரியாத சாஸ்திரம்.



சிலபேர்க்கு தெரியாத கதை.நம்மில் சில பேர் நாம் செய்யும் சில அன்றாட பழக்கவழக்கங்களை கூட தங்கள் எதற்கு செய்கிறோம் என்று தெரியாமலேயே செய்து கொண்டிருப்பர்.சரி விசயத்துக்கு வருவோம்,நாம் திருநீறு,குங்குமம்,சந்தனம்.நெற்றியில் வைத்துகொள்கிறோம் அல்லவா.இது ஒவ்வொன்றுக்கும் ஒரு அர்த்தம் உள்ளது என்ன என்று உங்களுக்கு தெரியுமா?
திறுநீரு
இதை எடுத்து நெற்றியில் பூசும் போது நாம் அனைவரும் ஒரு நாள் இந்த பூமியில் சாம்பலாகத்தான் போகப்போகிறோம் என நினைத்து பூசுவது.இது இந்துக்கலுக்கு மட்டும் பொருந்தும். ஏனென்றால் இந்துக்கள் மட்டுமே இறந்தவுடன் எரிக்கப்படுகின்றனர்.வயதில் மூத்தவர்கள் திருநீரு பூசும்போது பாருங்கள் எடுத்தவுடன் பூசிகொள்ளமாட்டார்கள்.எடுத்து பார்த்து அப்புறம்தான் பூசிக்கொள்வார்கள்.
குங்குமம்
இவ்வுலகில் உள்ள அனைத்து மனிதர்களின் உடல்கலிலும் இரத்தத்தின் நிறம் சிகப்பாகதான் இருக்கிறது.இவ்வுலகில் நாம் அனைவரும் சமம் என்பதையே குறிக்கிறது.
சந்தனம்
இந்துக்கள் மங்களகாரியங்களுக்கு மட்டும் பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.இது எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை.தெரிஞ்சா நீங்க சொல்லுங்க!
இதைபோல் நிறைய இருக்கிறது பிறகு பார்க்கலாம்.

1 comment:

Unknown said...

கவியரசு கண்ணதாசனின் "அர்த்தமுள்ள இந்து மதம் " எனும் அற்புத புத்தகத்தில் இந்து மத கலாச்சார பழக்க வழக்கங்கள் பற்றி விளக்கியுள்ளார்.
ஆன்மிகம் சார்ந்த பதிவுகளும் இன்றய சூழலுக்கு தேவை.நன்றி.தொடர்க.

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.