Sunday, June 29, 2008

அட போங்கடா நீங்களும் உங்க பிடிவாதமும்.






உண்மைக்கதை.நேற்று நடந்தது.நான் பார்த்தவரையில் காலம் காலமாக காதலுக்கு எதிர்ப்பு இருந்து கொண்டுதான் வருகிறது.இதை மறுப்பதற்கு இல்லை.மறுப்பவர்கள் மறுக்கலாம்.இப்போது எனது நண்பர் ஒருவருடைய மச்சான் அவர் ஒரு பெண்னை காதலித்து வந்தார்.ஒருதலை காதல் அல்ல.இரன்டுபேருமே காதலித்து வந்தனர்.வழக்கம் போல் வீட்டிற்கு தெரிந்தவுடன் எதிர்ப்பு வலுக்க ஆரம்பித்து விட்டது.பையன் வீட்டில் பையனை இதற்குமேல் இவனை இங்க வைக்ககூடாது என்று சிங்கப்பூர் அனுப்பி வைத்தனர். பென் வீட்டிலோ பெண்னை கன்டித்து வைத்தனர்.அதாவது சினிமா படத்தில் போல பெண்னுடைய அப்பா,நீ அந்த பையனை கல்யானம் பண்னினால் என்னை உயிருடன் பார்க்க முடியாது,இது அப்பாவின் மிரட்டல். பாவம் அவள் என்ன செய்வாள்.அதான் தன்னையே மாய்த்து கொண்டாள்.ஆமாம் ஏன் பெற்றோர்களே உங்களுக்கு ஏன் இந்த பிடிவாதம். இந்த பிடிவாதாத்தால் என்ன சாதித்துவிட்டீர்கள்.ஆனால் பெண் மனது வைத்துவிட்டால் அவ்வளவுதான் அதை தடுக்க யாராலும் முடியாது. இப்போதும் நமது தமிழ் சமூகத்தில் நிறைய காதலை எதிர்க்கும் (பெற்றோர்கள்) எனும் கரும்புள்ளி நிறைய இருக்கிறது.இந்த கரும்புள்ளிகள் கலையும் வரை காதலின் மரனச்சத்தம் கேட்டுகொண்டுதான் இருக்கும்.காதலனோ சிங்கையில் அழுது புலம்பிகொண்டிருக்கிறான்.அவனுக்கு என்ன ஆறுதல் சொல்ல.இதை எழுதும்போது தன்னையும் மீறி கண்னில் தண்னீர் வழிகிறது.

1 comment:

கோவி.கண்ணன் said...

அந்த பையன் ஒரு கோழை. அவனுடைய மனசாட்சி அவனுக்கு காலத்திற்கும் உறுத்தலாகவே இருக்கும். தம் பெற்றோர்களைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள் இதுபோன்றவற்றிற்கு ஆசைப்படக் கூடாது. மீறி காதல் என்று சென்றால் போராடிப் பார்க்கனும். முடியவில்லை என்றால் பதிவு திருமணம் செய்து கொள்ள வேண்டும்.

பெற்றோர்கள் எப்போதும் அப்படித்தான் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டுவார்கள். போகப் போக எல்லாம் சரியாகிவிடும்.

எனக்கு தெரிந்து பெற்றோர்களை மீறி செய்து கொண்ட காதல் திருமணங்கள் தோற்றுப் போனதில்லை. பெற்றவர்களும் பிடிவாதத்தை தொடர்ந்து வைத்திருந்ததில்லை.